மதுரைக்கு வடக்கில் சுமார் 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஆறாவதாகக் குறிப்பிடப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் அமைந்துள்ளது. அழகர் கோயிலுக்கு முன்னே அமைந்துள்ள கருப்பண்ண சுவாமி சன்னதி பிரசித்தி பெற்றது. ஆடி 18ம் தேதி மட்டும் திறந்திருக்கும். மலையில் முருகப்பெருமான் எழுந்தருளி உள்ளார். அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. அவ்வை மூதாட்டிக்கு நாவற் பழங்களை உதிர்த்துக் கொடுத்து அதன் மூலம் ஞானத் தத்துவத்தை உணர்த்திய தலம். மலையில் மேல் "நூபுர கங்கை" என்னும் தீர்த்தம் உள்ளது. |